அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கத்தினர் மனு


அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 30 Dec 2021 3:24 PM IST (Updated: 30 Dec 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கத்தினர் மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் வேலாயதம்பாளையம் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியதாவது:
வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆற்று குடிநீர், ஆழ்துளாய் தண்ணீர், தெரு விளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுசாமி கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதில் மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் செல்வி உள்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story