அவினாசி அரசு கல்லூரியில் மாணவர் சங்க அமைப்புதின விழா


அவினாசி அரசு கல்லூரியில் மாணவர் சங்க அமைப்புதின விழா
x
தினத்தந்தி 30 Dec 2021 3:24 PM IST (Updated: 30 Dec 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி அரசு கல்லூரியில் மாணவர் சங்க அமைப்புதின விழா

அவினாசியில் உள்ளஅரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் மாணவர் சங்க அமைப்பு தின விழாவை கொண்டாடப்பட்டது
மாணவர்களின் நலன் கருதியும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தொடர்ந்து இந்திய நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை இந்திய மாணவர் சங்கம் நடத்தி வந்துள்ளது. இந்த நிலையில் மாணவர் சங்கத்தின் 52 வது அமைப்பு தினத்தில் அவினாசி அரசு கலைக்கல்லூரி முன்பாக மாணவர் சங்க நிர்வாகிகள் சார்பில்மாணவர்கள் ஒன்றுகூடி கேக் வெட்டி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர் சஞ்சய், ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story