டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார்.
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார்.
டெங்கு காய்ச்சல்
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தோட்ட தொழிலாளி
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் சூர்யா(வயது 55). இவர் கோவையை அடுத்த துடியலூர் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதையொட்டி சிகிச்சைக்காக கடந்த 25-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
சிகிச்சை பலனின்றி சாவு
இதையடுத்து அவரை அங்குள்ள டெங்கு சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






