வால்பாறை மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


வால்பாறை மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2021 10:43 PM IST (Updated: 30 Dec 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி

கோவையில் இருந்து பொங்கல் பரிசு பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வால்பாறைக்கு சென்றது. லாரியை கடலூரை சேர்ந்த ரமேஷ் (வயது 33) என்பவர் ஓட்டி சென்றார். வால்பாறையில் பொருட்களை இறக்கி விட்டு திரும்பி பொள்ளாச்சி நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. வால்பாறை மலைப்பாதையில் குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியில் வந்த லாரி திடீரென்று கட்டுப்பாட்டு இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. 

இதில் டிரைவர் ரமேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதற்கிடையில் லாரி கவிழ்ந்ததால் மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆழியாறு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பிரேக் சூடு ஆனதால் கவிழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story