மீன் பிடிக்கும்போது படகு கவிழ்ந்து மீனவர் சாவு


மீன் பிடிக்கும்போது படகு கவிழ்ந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2022 1:40 PM IST (Updated: 1 Jan 2022 1:40 PM IST)
t-max-icont-min-icon

மீன் பிடிக்கும்போது படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் மணி (வயது 66), மீனவரான இவர் தனது மகன் கதிர்வேல், சகோதரர் அருள்தாஸ் ஆகியோருடன் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கரைப்பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் படகில் இருந்து வலை விரித்து மணி உள்ளிட்ட 3 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் பலத்த காற்று வீசியதால் சீற்றம் ஏற்பட்டு படகு தத்தளித்தது. அப்போது ராட்சத அலை மோதியதில் படகு தலைகுப்புற கடலில் கவிழ்ந்தது. இதில் மணி கடலில் மூழ்கினார்.

உடன் இருந்த மகன் மற்றும் அவரது சகோதரர் இருவரும் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் மீனவர் மணி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். பிறகு கதிர்வேல், அருள்தாஸ் இருவரும் நீந்தி கரையேறி தப்பித்தனர். பின்னர் இருவரும் கரைப்பகுதியில் இருந்து வேறு படகு மூலம் கடலுக்கு சென்று மீனவர் மணி உடலை மீட்டனர். மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story