பல் டாக்டர் வீட்டில் திருட்டு


பல் டாக்டர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 2 Jan 2022 3:48 PM IST (Updated: 2 Jan 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பல் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளார்கள்.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 5-வது பிரதான சாலையை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 69). பல் டாக்டரான இவர், தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகனை பார்க்க சென்றுவிட்டார். நேற்று வீட்டை சுத்தம் செய்ய வந்த வேலைக்கார பெண், ஜனார்த்தனன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பழவந்தாங்கல் போலீசார், அமெரிக்காவில் உள்ள பல் டாக்டர் ஜனார்த்தனனிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, வீட்டில் 2 தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பூஜை பொருட்கள் இருந்ததாக கூறினார்.

எனினும் அவர் சென்னை திரும்பி வந்தால்தான் மர்மநபர்கள் அவரது வீட்டில் இருந்து எவ்வளவு நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story