மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவிகள்


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 2 Jan 2022 7:03 PM IST (Updated: 2 Jan 2022 7:03 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. கலச, விளக்கு வேள்விப்பூசையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவங்கி வைத்து பங்கேற்றார். இவ்விழாவில் கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அருள்திரு அடிகளார் அவர்கள் திருக்கரங்களால் வழங்கினார். 

இந்தநிகழ்ச்சியில் இயக்கத் துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், அறங்காவலர்கள் ஆஷா அன்பழகன், உமாதேவி ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் இராஜகோபால் மற்றும் உதயகுமார் தலைமையில் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Next Story