ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவில்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும். இந்த திருக்கோவிலில் நேற்று ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
திருப்படி திருவிழாவினை தொடர்ந்து, புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12:01 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் மூலவர் முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து தங்கவேலுடன் பச்சை மரகதக்கல் மாலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமானுக்கு 108 வில்வ தங்க மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைப்பெற்றது. மேலும் உற்சவ முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை தாயார்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைக்காண தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் திரண்டதால் கோவிலுக்கு செல்லும் மலைபாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
மலைக்கோவில் செல்ல முக்கிய அரசியல் பிரமுகர்களின் கார்கள் அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
அதிக அளவில் திரண்ட கூட்டத்தால், பொது வழியில், மூலவரை தரிசிக்க 4 மணி நேரமும், 150 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தில் 2 மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழி்பட்டனர்.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை கோயில் நிர்வாகம் சார்பில் பின்பற்றப்படவில்லை.
மேலும் புத்தாண்டையொட்டி மலைக்கோவில் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் 500 மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story