நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் பேர் வருகை
நேற்று விடுமுறை தினமான ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் பேர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.
சென்னையில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் நேற்று விடுமுறையையொட்டி குடும்பம் குடும்பமாக குவிந்தனர். பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்களை பூங்காவிற்குள் அனுமதித்தனர்.
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா பெண் அதிகாரி ஒருவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியபோது, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 ஆயிரத்து 100 பேர் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இதேபோல புத்தாண்டு நாளன்று 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பூங்காவை சுற்றி பார்த்தனர் என தெரிவித்தார்
Related Tags :
Next Story