கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்ட ஊழியர்கள்
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு பல வருடங்களாக வேலை செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்தவித முன் அறிவிப்பின்றி வேலையை விட்டு விலக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் தொழிற்சாலை நிர்வாகம் முறையாக பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story