வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் சுகாதார சீர்கேடு


வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 4 Jan 2022 8:48 PM IST (Updated: 4 Jan 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் சுகாதார சீர்கேடு

வால்பாறை

வால்பாறை நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் இருக்கும் அனைத்து கடைகளிலும் பெட்டிக்கடைகளிலும் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் தட்டுகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் மது அருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் அதிகளவிலான உள்ளூர் வாசிகள் பிளாஸ்டிக் டம்ளர், திண்பண்டங்கள் மற்றும் தட்டுகளை வாங்கிக்கொண்டு சாலையோரங்களில் இருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளிலும் பயணிகள் நிழற்குடை பகுதிகளிலும் குறிப்பாக கூழாங்கல் ஆற்று பகுதிகளிலும் மது அருந்துகின்றனர்.மது அருந்தி விட்டு பிளாஸ்டிக் டம்ளர் தட்டுகளையும் மாமிச திண்பண்டங்களையும் தேயிலை தோட்ட பகுதியில் வீசியெறிந்து விட்டு செல்கின்றனர். சாலையோர வனப் பகுதிகளுக்குள்ளும் வீசிவிட்டு செல்கின்றனர். 
இதனால் தேயிலை தோட்ட பகுதிகள் சுகாதார சீர்கேடு அடைந்து வருவதோடு தேயிலை இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தேயிலை தோட்ட பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்ற அறிவிப்பு பலகைகளை வைத்திருந்தும் எந்தவித பயனுமில்லை. மேலும் எஸ்டேட் பகுதியில் மது அருந்துபவர்கள் வீசியெறிந்து செல்லும் மாமிச திண்பண்டங்களை சாப்பிடுவதற்கு வனவிலங்குகளும் தேயிலை தோட்ட பகுதிக்கும் அருகில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.இதனால் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. 
எனவே வால்பாறை நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம், சுகாதார துறை, வனத்துறையினர் இணைந்து ஒருங்கிணைந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் சோதனைகளை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து எஸ்டேட் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story