கொப்பரை தேங்காய் விலை உயர்வு


கொப்பரை தேங்காய் விலை உயர்வு
x
தினத்தந்தி 4 Jan 2022 8:48 PM IST (Updated: 4 Jan 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

கொப்பரை தேங்காய் விலை உயர்வு

பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவால் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து உள்ளது.

கொப்பரை தேங்காய் ஏலம்

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர்.விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கடந்த வாரத்தை விட வரத்து குறைந்து இருந்தது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

விலை உயர்ந்தது

ஆனைமலையில் நடந்த ஏலத்திற்கு 72 விவசாயிகள் 565 மூட்டை கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. அதன்படி 288 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.89.50 முதல் ரூ.92.30 வரையும், 277 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.92.40 முதல் ரூ.84 வரையும் ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட 29 மூட்டை வரத்து குறைந்து இருந்தது. இதன் காரணமாக கிலோவுக்கு கடந்த வாரத்தை விட ரூ.1.80 விலை அதிகரித்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கொப்பரை தேங்காய் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் கொப்பரை தேங்காய் விலை உயருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story