மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 4 Jan 2022 8:52 PM IST (Updated: 4 Jan 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

8-ம் வகுப்பு மாணவன்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38).கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (35). இவர்களுக்கு சரத் (14) என்ற மகனும், சாதனா (10) என்ற மகளும் இருந்தனர். சரத் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரைபள்ளிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டதால். தற்போது மாணவன் சரத் வீட்டில் இருந்தான். இந்தநிலையில் நேற்று காலை இவரது உறவினர் ஒருவர் அரண்மனை புதூர் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் தடுப்பூசி போடுவதற்காக தனது வீட்டில் உள்ள ஆதார் கார்டை சரத்தை வாங்கி வருமாறு செல்போனில் கூறியுள்ளார்.

விபத்தில் பலி

இதனையடுத்து சரத் அந்த நபரின் ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு நல்லட்டிபாளையத்திலிருந்து தனது வீட்டருகே உள்ள உறவினர் குருசாமி (19) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ள சாலையில் திடீரென நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் குருசாமி பின்னால் அமர்ந்திருந்த சரத் கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் சரத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சரத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சரத் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர் இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story