ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வினியோகம்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.
அந்தியூர்
பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. 21 பொருட்கள் அடங்கிய பரிசு பையை பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாங்கிச்சென்றார்கள்.
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடை வளாகத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொங்கல் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
விதிமுறையை கடைபிடித்து
இதேபோல் அந்தியூர் பகுதியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளிலும் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், கோபி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சுந்தர் ராஜா, அந்தியூர் வட்ட கள அலுவலர் சண்முகம், அந்தியூர் பொது வினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் பிரபு, அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் கந்தசாமி, தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி.ரமேஷ், அந்தியூர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சன்ரைஸ் சிவக்குமார் உள்பட பலர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வரிசையில் நின்று பரிசு பொருள் தொகுப்ைப வாங்கிச்சென்றார்கள்.
கோபி
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர தி.மு.க. செயலாளர் நாகராஜ் பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் சாகுல் அமீது, செயலாளர் சோமசுந்தரம் மற்றும் விஜய் கருப்புசாமி, காளியப்பன், கார்த்திகேயன், செங்குட்டுவன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் குஞ்சு கவுண்டர் என்கிற எம்.பி.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ராஜேந்திரன், மாணிக்கம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் அம்சவல்லி, வேலு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஊமாரெட்டியூர்
ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் அம்மாபேட்டை, ஊமா ரெட்டியூர், மூணாஞ்சாவடி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் எ.ஈஸ்வரமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத்தலைவர் பங்க் பாலு, நிலவள வங்கி தலைவர் யு.எஸ்.சுந்தரராசன் மற்றும் இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட 12 ரேஷன் கடைகளில் உள்ள 6 ஆயிரம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மொடக்குறிச்சி கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சு.குணசேகரன் பொங்கல் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் ஈஸ்வரி, மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், சங்கத்தின் செயலாளர் பழனிச்சாமி, மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சுதன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
Related Tags :
Next Story