பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனை மையம்


பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனை மையம்
x
தினத்தந்தி 6 Jan 2022 7:22 PM IST (Updated: 6 Jan 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனை மையம்


கோவை

பாலியல் குற்றங்களால் பாதித்த பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.

பாலியல் குற்றங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பும், குற்றவாளிகளுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை வாங்கி கொடுக்கவும்  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு அரசின் சார்பில் நிவாரண நிதியும் பெற்று கொடுக்கப்படுகிறது. 

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள், அதில் இருந்து மீள உளவியல் ஆலோசனை அவசியம். 

ஆலோசனை மையம்

இதையொட்டி தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கோவை நகர போலீசார் பீளமேடு கல்கிநகரில் "வளம்" என்ற ஆலோசனை மையத்தை தொடங்கினர். 

இதை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் போலீசில் புகார் அளிக்க அச்சப்பட கூடாது. தவறு செய்யும் நபர்கள் தான் வெட்கப்பட வேண்டும்.

கோவையில் நடந்த ஒரு சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் போலீசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் உயிரிழப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. 

எனவே பாதிக்கப்படுபவர்கள் போலீசில் புகார் அளிக்க தைரியமாக வர வேண்டும்.

புகார் செய்யலாம்

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வளம் என்ற மையம் உளவியல் ஆலோசனை வழங்கும். இங்கு வருபவர்களின் பெயர், விவரம் எங்கும் பதிவு செய்யப்படாது. 

யாரிடமும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படாது. ஆலோசனை பெறுவதன் மூலம் மனரீதியாக தைரியமாக செயல்படலாம்.

பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் 96558 00008 என்ற செல்போன் எண்ணிலும், 0422 2300970 என்ற போலீஸ் கட்டுப் பாட்டு அறை எண்ணிலும், 81900 00100 என்ற வாட்ஸ் அப் எண்ணி லும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா, கூடுதல் உதவி கமிஷனர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story