சுமைதூக்கும் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை


சுமைதூக்கும் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 6 Jan 2022 7:28 PM IST (Updated: 6 Jan 2022 7:28 PM IST)
t-max-icont-min-icon

சுமைதூக்கும் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கோவை

மது குடிக்க பணம் தராத காவலாளியை கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

காவலாளி கொலை

கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது55). இவர், ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை செய்து வந்தார். 

கடந்த 24.3.2017 அன்று இரவு, ராமன் காவல் பணியில் இருந்தார். அப்போது எட்டிமடையை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சந்திரன் (43) என்பவர் குடோன் பகுதிக்கு வந்தார்.

அவர், மதுகுடிக்க பணம் கேட்டு ராமனிடம் தகராறு செய்தார். அவரிடம் ராமன் பணம் இல்லை என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன், காவலாளி ராமனை அடித்து உதைத்து கீழே தள்ளினார். 

பின்னர் அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து ராமனின் தலையில் போட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இரட்டை ஆயுள்தண்டனை

ஆனால் இந்த கொலையில் உடனடியாக துப்பு கிடைக்கவில்லை. 

போலீசின் தீவிர விசாரணைக்கு பிறகு 2018-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் சந்திரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ராமனை சாதிபெயரை சொல்லி திட்டியதும் தெரிய வந்ததால் 

சந்திரன் மீது கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவும் (எஸ்.சி.-எஸ்.டி.) சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சக்திவேல், 

குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும், எஸ்.சி.-எஸ்.டி. சட்டப்பிரிவில் மற்றொரு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சந்திரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story