செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 வாக்காளர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2022 ஆனது 1.1.2022 தகுதி நாளாக கொண்டு 1.11.2021 முதல் 30.11.2021 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராகுல் நாத் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் பெற்றுக்கொண்டார்.
அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-
இறுதி வாக்காளர் பட்டியலின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 83 ஆயிரத்து 607, பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து ஆயிரத்து 248, இதரர் 450 ஆகும். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 ஆகும்.
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 56 ஆயிரத்து 239, பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 394, இதரர் 122 என மொத்தம் 7 லட்சத்து 11 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர்.
பல்லாவரம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 979, பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 724, இதரர் 42 என மொத்தம் 4 லட்சத்து 44 ஆயிரத்து 745, தாம்பரம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 880, பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 13 ஆயிரத்து 425, இதரர் 60 என மொத்தம் 4 லட்சத்து 24 ஆயிரத்து 365, செங்கல்பட்டு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 17 ஆயிரத்து 312, பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 763, இதரர் 57 என மொத்தம் 4 லட்சத்து 43 ஆயிரத்து 132, திருப்போரூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 531, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 572, இதரர் 50 என மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 153, செய்யூர் (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 545, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 129, இதரர் 32 என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 706 பேர் உள்ளனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 121, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 641, இதரர் 87 என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 849 ஆகும். சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் புதிதாக 55 ஆயிரத்து 957 நபர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இநத நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலாஜி, தேர்தல் தாசில்தார் ராஜேஷ், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story