காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 933 வாக்காளர்கள்: கலெக்டர் ஆர்த்தி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 933 வாக்காளர்கள்: கலெக்டர் ஆர்த்தி
x
தினத்தந்தி 6 Jan 2022 3:01 PM GMT (Updated: 2022-01-06T20:31:53+05:30)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல்வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2022-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,49,933. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,56,760. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,92,996. இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 177.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் விவரம் பின்வருமாறு:-

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 95 ஆயிரத்து 414, பெண்கள்- 2 லட்சத்து 488, இதரர்- 52, மொத்தம்- 3 லட்சத்து 95 ஆயிரத்து 954.

உத்திரமேரூர்

ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 80 ஆயிரத்து 1, பெண்கள்- 1 லட்சத்து 90 ஆயிரத்து 427, இதரர்- 62, மொத்தம்- 3 லட்சத்து 70 ஆயிரத்து 490.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 29 ஆயிரத்து 93, பெண்கள்- 1 லட்சத்து 38 ஆயிரத்து 923, இதரர்- 46 என மொத்தம்- 2 லட்சத்து 68 ஆயிரத்து 62 வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள்- 1 லட்சத்து 52 ஆயிரத்து 252, பெண்கள்- 1 லட்சத்து 63 ஆயிரத்து 158, இதரர்- 17 என மொத்தம்- 3 லட்சத்து 15 ஆயிரத்து 427 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்ட அலுவலர் அலுவலங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story