நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
கிணத்துக்கடவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு, வடபுதூர், சொலவம்பாளையம், பொட்டையாண்டி புறம்பு, கல்லாபுரம், சொக்கனூர், நெம்பர் 10 முத்தூர், தேவராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 70 ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபட்டு வருகிறது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறும்போது, கிணத்துக்கடவு தாலுகாவில் 70 ரேஷன் கடையில் 33 ஆயிரத்து 521 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை 36 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் வழங்கும் பணி நடக்கிறது என்றனர்.
Related Tags :
Next Story