மேலும் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
மேலும் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 14 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று பாப்பம்பட்டியில் 31 வயது ஆண், தாளக்கரையில் 18 வயது வாலிபர் என 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் சுல்தான்பேட்டையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அபேட் மருந்து தெளித்தல், கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story