கோவையில் ஒரே நாளில் 309 பேருக்கு தொற்று உறுதி


கோவையில் ஒரே நாளில் 309 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 Jan 2022 2:48 AM IST (Updated: 7 Jan 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஒரே நாளில் 309 பேருக்கு தொற்று உறுதி

கோவை

கோவையில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் முதியவர் ஒருவர் பலியானார். 

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா உறுதியானது. அதுவே நேற்று கொரோனா பாதிப்பு யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென உயர்ந்து 309 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 330-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 95 பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 503 பேர் குணமடைந்து உள்ளனர்.

முதியவர் பலி

இதுதவிர கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 522 ஆக அதிகரித்தது. 

மேலும் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,305-ஆக உயர்ந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி ஒரே நாளில் 338 பேருக்கு கொரோனா உறுதியானது. அதன் பின்னர் 6  மாதத்திற்கு பிறகு இரு மடங்காக உயர்ந்து மீண்டும் 300-ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Next Story