விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்

மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் மறைமலைநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்பேரில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 1.4.2003 முதல் 31.3.2013 வரை விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்த விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்து புதிய விவசாய மின் இணைப்பு வழங்குதல் தொடர்பான சிறப்பு முகாம் மறைமலைநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மறைமலைநகர் செயற்பொறியாளர் ஆர்.மனோகரன் தலைமை தாங்கினார்.
உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், பார்த்திபன், ரவிச்சந்திரன், பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்துகொண்ட விவசாயிகள் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம், புதிய மின் இணைப்பு கோரி மனுக்களை அளித்தனர். விவசாயிகள் அளித்த சில மனுக்கள் மீது செயற்பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆணைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story






