தனியார் மருத்துவமனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தனியார் மருத்துவமனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை,
கோவை சுந்தராபுரத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையை கண்டித்து அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வக்கீல் சுதாகாந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டி ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும் போது, பிம்ஸ் மருத்துவமனை மீது அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கொரோனா காலத்தில் நோயாளிகளிடம், அரசு நிர்ணயம் செய்ததை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்து உள்ளது.
இறந்த நோயாளிகளின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த மூர்த்தி, தியாகு, ராவணன், அகத்தியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






