மேல்மருவத்தூரில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து நெரிசல்


மேல்மருவத்தூரில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 7 Jan 2022 7:18 PM IST (Updated: 7 Jan 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

வியாழக்கிழமைான நேற்று அதிக அளவு பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலில் குவிந்தனர்.இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது . வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமைான நேற்று அதிக அளவு பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் தாங்கள் வந்திருந்த வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.


Next Story