தேவரியம்பாக்கம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பக்கம் ரேஷன்கடையில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் .சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கிராம மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளி்ட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ஞானவேல், சூரியகாந்தி, பூபதி, கற்பகம், தேவரியம்பக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கடேசன், செயலாளர் புஷ்பலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் கிராம மக்கள் ரேஷன் கடை அருகே பலன்தரும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.
Related Tags :
Next Story






