டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி, வாலிபர் கைது
சீர்காழியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியாளர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டு, டாஸ்மாக் கடையின் பூட்டுகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை கண்ட டாஸ்மாக் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம நபர் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பாண்டியன் (வயது 48) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சீர்காழி கோவிந்தராஜன் நகரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சக்திவேல் (19) என்பவர் டாஸ்மாக் கடையில் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story