செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,039 பேர் பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,039 பேர் பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Jan 2022 3:01 PM IST (Updated: 8 Jan 2022 3:01 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,039 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 780 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,553 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,446 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,268 பேர் உயிரிழந்துள்ளனர். 853 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story