படப்பை அருகே பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய தாய், மகன் - போலீசார் விசாரணை
படப்பை அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 8-வது தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பிரேம்குமார் (வயது 45), இவருடைய மனைவி சுகாசினி (38). இவர்களது மகன் பிரனித் (11). அம்பத்தூர் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பிரேம்குமார் புராஜக்ட் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல வேலைக்கு சென்றவர் பணி முடிந்து இரவு 10½ மணிக்கு வீடு திரும்பி உள்ளார். வீட்டின் கதவை திறப்பதற்காக தட்டி பார்த்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள கொக்கியில் அவரது மனைவி சுகாசினி, மகன் பிரனித் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தாய், மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story