கைதிகளை 100 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும்

கைதிகளை 100 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும்
கோவை
10 ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனை கைதிகளை 100 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கூறினார்.
முற்றுகை போராட்டம்
10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிக ளை ஜாதி, மத வித்தியாசமின்றி பொதுமன்னிப்பின் அடிப்படையில்
தமிழக அரசு விடுதலை செய்யக்கோரி, மனிதநேய ஜனநாயக கட்சியி னர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதற்கு தமீமுன் அன்சாரி தலைமை தாங்கினார். இதில் திரளானவர் கள் கலந்து கொண்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிக ளை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு, கு.ராமகிருட்டிணன், சுசி கலையரசன், பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், மெரினா போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜலீல், ரிபாயி, ஹரூன் ரசீது, சுல்தான்அமீர், எம்.எச்.அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு பின்னர் தமீமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
விடுவிக்க வேண்டும்
பேரறிவாளன் உள்பட 7 பேர், 38 முஸ்லிம் கைதிகள், சங்பரிவார் அமைப்பை சேர்ந்த 4 பேர், தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங் களில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்,
வீரப்பன்தேடுதல் வேட்டை யில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உள்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவிப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக நாங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வற் புறுத்தியதால் ஆணையம் அமைக்கப்பட்டது. அது விரைவில் விசார ணை நடத்தி கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாட்களுக்குள் முடிவு
கொரோனா 3-வது அலை பரவல் நிலையில் கூட உயிரையும் துச்சம் என மதித்து ஆயிரக்கணக்கானவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் சமூகநீதி அமைப்புகள், திராவிட அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் மூலம் கோவையில் ஒரு பிரகடனத்தை அறிவித்துள்ளோம்.
அதன்படி எங்களது கோரிக்கை குறித்து 100 நாட்களுக்குள் அரசு நல்ல முடிவை எடுத்து கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
அதுவரை காத்திருப்போம். அதன்பிறகும் கைதிகளை விடுவிக்கா விட்டால் அனைத்து தலைவர்களையும் கூட்டி அடுத்தகட்டமாக ஆலோசனை நடத்தி ஜனநாயக அடிப்படையிலான நல்ல முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






