என்ஜினீயர்கள் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு
என்ஜினீயர்கள் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு
கோவை
என்ஜினீயர்கள் வீடுகளில் 22 பவுன் தங்க நகை திருடி அதை விற்று, புதிய கம்மல் வாங்கி உரிமையாளரிடம் காட்டிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
என்ஜினீயர் வீடுகளில் திருட்டு
கோவை சாய்பாபா காலனி கோவில் மேடு, தவசி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரசாந்த் (வயது 29).
கணினி என்ஜினீயர். இவர் கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்றார்.
அப்போது அவருடைய வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதே குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாத் (42). என்ஜினீயர். இவருடைய வீட்டிலும் 10 பவுன் நகை திருட்டு போனது.
இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பெண் கைது
இதில் பிரசாந்த் வீட்டில் வேலை செய்த பெண் புதிதாக தங்க கம்மலை அணிந்தபடி வந்துள்ளார்.
அவர் அந்த புதிய தங்ககம்மலை தான் வேலை பார்க்கும் வீட்டு உரிமையாளரிடம் காண்பித்து நன்றாக இருக்கிறதா? என்று கேட்டு உள்ளார்.
இந்த தகவலை அறிந்த போலீசார், சந்தேகத்தின் பேரில், இடையர்பாளையம் ரங்கம்மாள் வீதி அன்புநகரை சேர்ந்த வேலைக்கார பெண் சூர்யாவிடம் (30) விசாரணை நடத்தினர்.
அப்போது, 2 என்ஜினீயர்களின் வீடுகளிலும் நகை திருடியதை அந்த பெண் ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 22 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இதையடுத்து சூர்யா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story