துணிப்பையுடன் வந்தால் 5 தள்ளுபடி
துணிப்பையுடன் வந்தால் 5 தள்ளுபடி
கோவை
கேரிபேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதை தடுக்க தமிழக அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அதற்கு வலுசேர்க்கும் வகையில் கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு பகுதி தள்ளுவண்டி வியாபாரிகள் துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
அவர்கள், துணிப்பை கொண்டு வந்து காய்கறி மற்றும் பொருட்கள் வாங்கினால் ரூ.5 தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்து, அதற்கான அறிவிப்பு பலகைகளையும் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து தள்ளுவண்டி வியாபாரிகள் கூறியதாவது
கேரிபேக் பயன்பாட்டை தமிழக அரசு முற்றிலும் தடை செய்து உள் ளது. மேலும் அதை பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்களிடம் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த துணிப்பை கொண்டு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு ரூ.5 தள்ளுபடி வழங்குகிறோம்.
எனவே பலரும் ஆர்வமுடன் துணிப்பை கொண்டு வருகின்றனர். அரசின் மஞ்சப்பை திட்டத்தில் எங்களின் பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
Related Tags :
Next Story