குமரியில் 10 போலீசாருக்கு கொரோனா


குமரியில் 10 போலீசாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Jan 2022 2:20 AM IST (Updated: 9 Jan 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் 10 போலீசார் உள்பட 139 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:
குமரியில் 10 போலீசார் உள்பட 139 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
10 போலீசாருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு 3 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டு தனிமையில் இருந்து வருகிறார்கள்.
 இதற்கிடையே குமரியில் கடந்த 5 நாட்களாக கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்டத்தில் சளி பரிசோதனைகளும் அதிகாிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 580 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மாநகரில் மட்டும் 1,102 பேர் அடங்குவர்.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை போலீசாருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு பணியாற்றும் 10 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  
தொற்றால் 139 பேர் பாதிப்பு
இதேபோல் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் நாகர்கோவில் மாநகரில் மட்டும் 54 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது வீட்டு தனிமையிலும், ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story