தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 9 Jan 2022 8:44 PM IST (Updated: 9 Jan 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் முன்பு சாலை விரிவாக்கம் செய்யப் பட்டு உள்ளது. இந்த நிலையில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு சுவருக்கு நடுவில் பயணிகள் நடந்து செல்கின்றனர். இத னால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பயணிகள் சுரங்கப் பாதை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, பொள்ளாச்சி

விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

கோவை பாலசுந்தரம் சாலையில் அம்பேத்கர் விடுதி அருகே சாலையில் பள்ளம் இருந்தது. இதை தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதால், பள்ளம் இருந்த இடத்தில் சிமெண்ட் கலவை போட்டு சரி செய்யப்பட்டது. ஆனால் சிமெண்ட் பூசப்பட்ட இடத்தில், தற்போது மீண்டும் பள்ளமாகி உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். 
செல்வன், கோவை.

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

கோவை, சாய்பாபா காலனி அருகே கலெக்டர் சிவக்குமார் வீதியில் மாநகராட்சி பூங்காவை ஒட்டிய பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் அங்கு குவந்து கிடப்பதால், காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று விடுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தொற்று நோய் பரவுவதற்கு முன்பு குப்பைகளை அகற்ற வேண்டும். 
சந்திரன், சாய்பாபாகாலனி. 

பராமரிப்பு இல்லாத பூங்கா

கோவை சாய்பாபாகாலனி  காளியப்பா வீதியில் உள்ள பூங்கா முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. அத்துடன் அது கோழிகளை வளர்க்கும் பண்ணையாகவும் மாறிவிட்டுது. மேலும் அங்கு ஓய்வு எடுக்க போடப்பட்டு இருக்கும் இருக்கைகள் அனைத்தும் பழுதடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும்.
கணேசன், கோவை. 

குப்பைகள் நிறைந்த சாலை

கோவை- மேட்டுப்பாளையம் சாலைஅழகேசன் வீதியில் உள்ள கூட்டுறவு நெசவாளர் தொழிற்சாலை, கோ-ஆப்டெக்ஸ் அலுவலக அருகே சாலையில் குப்பை அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சுத்தம் செய்ய வேண்டும். 
காசிராஜன், கோவை. 

குப்பைத் தொட்டி வேண்டும் 

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள வீதிகளில் குப்பை முறையாக அள்ளப்படுவது இல்லை. இதனால் அங்கு இருக்கும் சிறிய அளவிலான குப்பை தொட்டி நிறைந்து வழிகிறது. இதனால் அதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. எனவே அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த அங்கு பெரிய அளவிலான குப்பை தொட்டி வைத்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும். 
ராகுல், கோட்டைமேடு. 

குதிரைகள் தொல்லை 

கோவை செல்வபுரம், கோவை புதூர், துடியலூர் பகுதிகளில் சாலைகளில் குதிரைகள் சுற்றித் திரிகின்றன. இவ்வாறு செல்லும் குதிரைகள் அவ்வப்போது ஒன்றுக்கொன்று சண்டைபோடுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு குதிரைகள் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து முறையாக பராமரிக்க வேண்டும். 
சுதா, செல்வபுரம்.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

கோவையை அடுத்த சரவணம்பட்டி சத்தி சாலையில் இருந்து சின்ன வேடம்பட்டிக்கு செல்லும் இணைப்பு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சரிசெய்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
மணி, கோவை. 

குடிநீர் வழங்க வேண்டும்

கோவை மாநகராட்சி 2-வது வார்டு துடியலூர் விஸ்வநாத கவுண்டர் கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 17 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் இந்த பகுதியை சே்ாந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
ஜோதிராம், துடியலூர். 

பயன்படுத்த முடியாத கழிப்பிடம்

சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் காந்திநகர் பகுதியில் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கழிப்பிடத்தை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
ரமேஷ், சிங்காநல்லூர். 


Next Story