தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்


தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2022 5:44 PM IST (Updated: 10 Jan 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் பல்வேறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

சமூக பொறுப்புணர்வுக்காக ஒதுக்கப்படும் நிதியை தொழிற்சாலைகள் முறையாக செலவிட வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடித்து பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும். இதற்கான தகுந்த முன்னேற்பாடுகளை தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொழிற்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும். அபாயகரமான கழிவுகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்பட்ட நிலத்தில் கொட்டுதல் மற்றும் மறு சுழற்சிக்கு அனுப்புதல் போன்றவை முறையாக கையாள வேண்டும். இது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சுற்றுப்புறங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரவிச்சந்திரன் மற்றும் தொழிற்சாலை பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


Next Story