வீடுகளில் குப்பை வரி வசூலிக்க நடவடிக்கை
வீடுகளில் குப்பை வரி வசூலிக்க நடவடிக்கை
கோவை
சொத்து வரியுடன் சேர்த்து மாதம் ரூ.10 அதிகபட்சம் ரூ.50 வரை வீடுகளில் குப்பை வரி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குப்பை வரி
மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் குப்பை உருவாக்குவோரிடம் சேவை கட்டணம் வசூலிக்க உள்ளாட்சி அமைப் புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதில், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலக கட்டிடங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி சொத்துவரியுடன் சேர்த்து குப்பை வரியும் வசூலிக்க கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக யு.டி.ஐ.எஸ். என்ற மென்பொருள் மூலம் சொத்துவரி செலுத்தும்போது, குப்பை வரியும் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வருவாய் குறைந்தது
ஆனால் நிர்வாக காரணங்களால் மென்பொருள் பயன்பாட்டை மாநகராட்சி கைவிட்டது. இதனால் குப்பைவரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக மாநகராட்சியின் வருவாய் ரூ.34 கோடியே 31 லட்சம் குறைந்தது தணிக்கை துறை ஆய்வில் தெரியவந்தது.
வரும் நிதி ஆண்டு முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பை வரியை யும் வசூலிக்கும் வகையில் மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குப்பை வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலுவை வரியை வசூலிக்க திட்டம்
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது
வீடுகளின் சதுர அடிக்கு தகுந்தவாறு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.50 வரை குப்பை வரி வசூலிக்க உத்தர விடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவையில் 4 லட்சம் வீடுகளுக்கு சொத்து வரியுடன் சேர்த்து குப்பை வரி வசூலிக்கப்படும்.
வணிக வளாகங்களுக்கு ஏற்கனவே குப்பை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த 2021 செப்டம் பர் மாதம் வரையிலான நிலுவை குப்பை வரியை 9 தவணையாக வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவையில் குப்பை சேகரிக்க ரூ.2 கோடியே 36 லட்சம் செலவில் 500 குப்பை தொட்டிகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story