பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி


பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 10 Jan 2022 8:15 PM IST (Updated: 10 Jan 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

கிணத்துக்கடவு

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. மேலும் ஒமைக்ரான் அச்சுறுத்தலும் தொடர்கிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இதையொட்டி கிணத்துக்கவு அருகே நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டர், மருத்துவ ஊழியர்கள் உள்பட முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இதனை நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தொடங்கி வைத்தார். நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் டாக்டர்கள் சமீதா, அருண்பிரகாஷ், முகில்வண்ணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story