தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2022 8:16 PM IST (Updated: 10 Jan 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி

இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் கற்பழிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 16.7.2016 அன்று அந்த இளம்பெண்ணை கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, அவரது குடும்ப நண்பர்களான விமல்ராஜ்(வயது 31), கார்த்திக் (24) ஆகியோர் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஜாமீனில் வெளியே வந்த கார்த்திக், அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகவில்லை.

குற்றவாளி கைது

இதையடுத்து கடந்த 6-ந் தேதி குற்றம் சாட்டப்பட்ட விமல்ராஜ், கார்த்திக் ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளி கார்த்திக்கிற்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர் தனிப்படை போலீசார், அவரது செல்போன் எண்ணை கண்காணித்தனர். அப்போது கார்த்திக், மதுரையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் மதுரைக்கு சென்று கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story