தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ரகுபதி. இவருடைய மனைவி பூங்கொடி(வயது 40). இவர்களது மகள் லாவண்யா(21). இவருக்கும், சின்னாம்பாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால் அடுத்த சில நாட்களில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக லாவண்யா தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியதாக தெரிகிறது. உடனே பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு லாவண்யா தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவரது தாயார் பூங்கொடி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story