முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில்: போலீஸ் சூப்பிரண்டு


முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில்: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 10 Jan 2022 8:29 PM IST (Updated: 10 Jan 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்தை நிறுத்தி அனைத்து கடைகளையும் அடைத்து தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது.

இநத நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.

சோதனை சாவடிகள்

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 46 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம் நகரில் முக்கிய முக்கிய சாலைகளான பூக்கடை சத்திரம், காந்திரோடு, நெல்லுக்கார தெரு, நான்கு ராஜ வீதிகள், காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மாவட்டம் போதும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதே போல் ஸ்ரீபெரும்புதூர், படப்பை, வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.


Next Story