வாலிபருக்கு ஆயுள் தண்டனை


வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 10 Jan 2022 10:37 PM IST (Updated: 10 Jan 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு ஆயுள் தண்டனை


கோவை

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த விவகாரத்தில் தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறப்பட்டது.

தொழிலாளி அடித்துக் கொலை

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற கஞ்சி (வயது 38). இவர் கோவை வெறைட்டி ஹால் ரோடு பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8.6.2019 அன்று கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை தொடர்பாக சுல்தான் அலாவுதீன், விருது நகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் தினா ஆகியோரை வெறைட்டிஹால் ரோடு போலீசார் கைது செய்தனர். 

ஓரினச்சேர்க் கைக்கு அழைத்ததால் கட்டையால் அடித்து விஜயகுமாரை கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.

ஆயுள் தண்டனை

தினா மீதான வழக்கு கோவை செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. சுல்தான் அலாவுதீனுக்கு அப்போது 17 வயது என்பதால் போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

 தற்போது அவருக்கு 19 வயது ஆகிறது. இந்த நிலையில் போக்சோ கோர்ட்டு நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட சுல்தான் அலாவுதீனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

இதைத் தொடர்ந்து சுல்தான் அலாவுதீன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story