மாவட்ட செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Corona guarantees 36 employees of Tambaram Corporation

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா உறுதி

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா உறுதி
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தாம்பரம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி விடுதி மாணவர்கள், 2 பிரபல துணிக்கடை ஊழியர்கள், தாம்பரத்தில் உள்ள கல்லூரி விடுதி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள்

இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் 36 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அதன்படி தாம்பரம் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள்-14, மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்களான பம்மலில் 17 பேர், செம்பாக்கத்தில்-5 பேர் என 36 ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் நேற்று மட்டும் 237 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 940 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
2. அசாமில் வெள்ளம்; 7 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர் பாதிப்பு
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 7 மாவட்டங்களை சேர்ந்த 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. அசாமில் வெள்ளம்: 3 பேர் பலி; 25 ஆயிரம் பேர் பாதிப்பு
அசாமில் இந்த ஆண்டில் ஏற்பட்ட முதல் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 25 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. மக்களை பாதிக்காமல் கட்டண உயர்வு என்பது பொய் - ஒ.பன்னீர் செல்வம்
மக்களை பாதிக்காமல் கட்டண உயர்வு என்பது திமுகவின் அப்பட்டமான பொய் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
5. கொரோனாவில் இருந்து குணமடைந்தவரா நீங்கள்?ஆய்வில் கூறும் உண்மை என்ன ?
கொரோனா பாதித்த பாதி பேர், பாதிப்புக்கு உள்ளான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் எதாவது ஒரு நோய் அறிகுறியுடன் காணப்படுவது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.