காஞ்சீபுரம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரானின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். இதில் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், மருத்துவ இணை இயக்குனர் ஜீவா, துணை இயக்குனர் சித்தரசேனா மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story