திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு


திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2022 6:04 PM IST (Updated: 11 Jan 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகின்ற 15-ந் தேதி (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வடலூர் ராமலிங்கனார் நினைவு தினம் மற்றும் 26-ந் தேதி (புதன்கிழமை) குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்கள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தையும் மேற்கண்ட 3 நாட்கள் கண்டிப்பாக மூட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story