பொன்னேரி, திருநின்றவூர் நகராட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்


பொன்னேரி, திருநின்றவூர் நகராட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்
x
தினத்தந்தி 11 Jan 2022 7:22 PM IST (Updated: 11 Jan 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

திருநின்றவூர் நகராட்சி ஆகிய நகராட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொன்னேரி நகராட்சி மற்றும் திருநின்றவூர் நகராட்சி ஆகிய நகராட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

அதை, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல் (பொறுப்பு) சுதா, பொன்னேரி நகராட்சி ஆணையர் தனலட்சுமி, திருநின்றவூர் நகராட்சி ஆணையர் கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story