ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jan 2022 7:39 PM IST (Updated: 11 Jan 2022 7:39 PM IST)
t-max-icont-min-icon

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் பெரிய கம்மாளப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, 21 வயதுப் பெண், 57 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அங்கு சென்ற சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு மாத்திரைகள் வழங்கினர். தனித்தனி அறைகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரையும், மேற்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் விளக்கினர். இதையடுத்து அந்தப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடன. மேலும் ஆதிதிராவிடர் காலனி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுல்தான்பேட்டையில் மேற்கண்ட 3 பேர் உள்பட நேற்று மொத்தம் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 
1 More update

Next Story