பொள்ளாச்சி சந்தையில் காங்கேயம் காளைகள் வாங்க விவசாயிகள் ஆர்வம்
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் காங்கேயம் காளை, நாட்டு மாடுகள் வாங்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
பொள்ளாச்சி
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் காங்கேயம் காளை, நாட்டு மாடுகள் வாங்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
மாட்டு சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று சந்தை நடைபெற்றது. சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.
இதை தவிர பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி விவசாயிகளும் வந்து மாடுகளை வாங்கினார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் காங்கேயம் காளை, நாட்டு மாடுகளை ஆர்வத்துடன் விவசாயிகள் வாங்கி சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
விவசாயிகள் ஆர்வம்
பொள்ளாச்சி சந்தைக்கு 1500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. காங்கேயம் காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், மொரா ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், செர்சி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
பொங்கல் பண்டிகை கொண்டப்பட உள்ளதால் காங்கேயம் காளை, நாட்டு மாடுகள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெறுவதால் விவசாயிகள் மாடுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story