மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள்
பொங்கல் பண்டிகையையொட்டி கோவை மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கரும்புகள் குவிந்துள்ளன
கோவை
பொங்கல் பண்டிகையையொட்டி கோவை மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கரும்புகள் குவிந்துள்ளன. 15 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரும்புகள் குவிந்தன
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் கோவை தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம், எம்.ஜி.ஆர். மார்க்கெட் டிற்கு கரும்புகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.
இவை மதுரை மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 வரை விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.50- க்கு விற்கப்படுகிறது.
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கரும்பு வியாபாரி பழனி (வயது 45) என்பவர் கூறியதாவது
15 கட்டுகள் ரூ.500
மதுரை மேலூரில் கரும்பு தோட்டம் வைத்துள்ளோம். அங்கு கரும்புகளை வெட்டி, ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்காக கோவை மார்க்கெட்டில் கரும்பு கடை போட்டு வியாபாரம் செய்வோம்.
கொரோனா காரணமாக வியாபாரம் சரிவர நடைபெறுமா? என்ற அச்சம் உள்ளது. இந்த ஆண்டு 19 டன் கரும்பு கொண்டு வந்துள்ளோம்.
இந்த வருடம் அதிகமாக மழை பெய்ததால் கரும்பு விளைச்சல் குறைவாக இருந்தது.
ஆனால் பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தது. தற்போது கரும்புகட்டு ரூ.500 -க்கு விற்கிறோம்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுக்கு கரும்பு கொள்முதல் செய்தது வரவேற்கத்தக்கது.
ஆனால் தற்போது நிறுவனங்கள், பொதுமக்கள் கரும்புகளை அதிகம் வாங்குவார்கள் என்பதால் கடை போட்டு உள்ளோம்.
ஆனால் எந்த அளவிற்கு வியாபாரம் இருக்கும் என்று கணிக்க முடியவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story