வெள்ளலூர் அருகே பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்


வெள்ளலூர் அருகே பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
x
தினத்தந்தி 11 Jan 2022 8:29 PM IST (Updated: 11 Jan 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளலூர் அருகே பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்


போத்தனூர்

வெள்ளலூர் அருகே பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

பெரியார் சிலை அவமதிப்பு

கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிறுத்தம் அருகே பெரியார் சிலை உள்ளது. சம்பவத்தன்று பெரியார் சிலை மீது காவிப்பொடி தூவியும், செருப்பு மாலை அணிவித்தும் மர்ம நபர்கள் அவமதித்தனர். 

இதை கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் பெரியார் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

2 பேர் கைது

அதில், பெரியார் சிலைக்கு 2 பேர் செருப்பு மாலை அணிவிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

இதில், அவர்கள் 2 பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

 விசாரணையில் அவர்கள்,வெள்ளலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (26), அவரது நண்பர் மோகன்ராஜ் (28) என்பதும் தெரியவந்தது.

 இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாணை நடத்திய போது, பெரியார் சிலையை அவமதித்ததை ஒப்புக்கொண்டனர். 

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story