இன்ஸ்டாகிராமில் போலி பக்கம் தொடங்கி மாணவியை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்


இன்ஸ்டாகிராமில் போலி பக்கம் தொடங்கி மாணவியை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 11 Jan 2022 8:31 PM IST (Updated: 11 Jan 2022 8:31 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராமில் போலி பக்கம் தொடங்கி மாணவியை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்


கோவை

இன்ஸ்டாகிராமில் போலி பக்கம் தொடங்கி மாணவியை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

மாணவியுடன் பழக்கம்

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெட்டாம்பூச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகபிரியன் (வயது 21). குளிர்பான விற்பனை பிரதிநிதி. 

இவர் கருமத்தம்பட்டி பகுதிக்கு சென்ற போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. 


இதனால் அவர்கள் செல்போன் எண்ணை பரிமாறி பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவியை சந்தித்த ஜெகபிரியன் திடீரென்று காதலிப்பதாக கூறினார். 

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, ஜெகபிரியனுடன் பேசுவதை தவிர்த்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கம்

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகபிரியன் அந்த மாணவியை பழி வாங்க திட்டமிட்டார். இதற்காக அவர், இன்ஸ்டாகிராம் சமூகவலைத் தள பக்கத்தில் மாணவியின் புகைப்படத்துடன் போலியாக பக்கத்தை தொடங்கினார். 


அதில், எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று மாணவி யின் செல்போன் எண்ணை பதிவிட்டதாக தெரிகிறது. 

இதை பார்த்த சிலர் மாணவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, விசாரித்த போது,

 இன்ஸ்டாகிராமில் போலி பக்கம் தொடங்கி மாணவியின் செல்போன் எண்ணை பதிவிடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

போக்சோவில் கைது

இது பற்றி அந்த மாணவி தனது தந்தையிடம் கூறினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ் பெக்டர் ஜெயதேவி விசாரணை நடத்தினார்.

இதில் ஜெகபிரியன் மாணவியின் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிரா மில் போலியாக பக்கத்தை தொடங்கி ஆபாசமாக சித்தரித்தது தெரிய வந்தது.

 இதையடுத்து ஜெகபிரியன் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story