2,215 லிட்டர் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட 2,215 லிட்டர் சாராயத்தை தரையில் கொட்டி போலீசார் அழித்தனர்.
வெளிப்பாளையம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள், சாராயம் கடத்தப்படுகிறதா? என மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மது கடத்தலில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுதவிர கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் சாராயம், மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராய கேன்கள் மற்றும் மூட்டைகள் நாகை ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ்கார்த்திக் முன்னிலையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் டூனிக்ஸ் மேரி தலைமையில் போலீசார் 2 ஆயிரத்து 215 லிட்டர் சாராயத்தை தரையில் கொட்டி அழித்தனர்.
Related Tags :
Next Story